இந்தியா

கைப்பையை பாவாடையாக மாற்றி அணிந்த நடிகை

Published On 2023-06-20 10:11 IST   |   Update On 2023-06-20 10:11:00 IST
  • பிகினி உடை மற்றும் பீட்சாக்களால் இணைக்கப்பட்ட டாப் போன்றவை சர்ச்சைகளை ஏற்படுத்தி இருந்தது.
  • ஒரு வீடியோவில் கைப்பை ஒன்றை பாவாடையாக மாற்றி அணிந்துள்ளார்.

பிரபல இந்தி நடிகை உர்பிஜாவேத் சமூக வலைதளங்களில் சுறுசுறுப்பாக இயங்குபவர். இவர் அடிக்கடி வித்தியாசமாகவும், கவர்ச்சியாகவும் உடைகள் அணிந்து படங்களை தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிடுவார். அவற்றில் பிகினி உடை மற்றும் பீட்சாக்களால் இணைக்கப்பட்ட டாப் போன்றவை சர்ச்சைகளை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் கைப்பை ஒன்றை பாவாடையாக மாற்றி அணிந்துள்ளார். இது தொடர்பான வீடியோவில் பிரவுன் நிற கைப்பை ஒன்றை பாவாடை (ஸ்கர்ட்) மற்றும் டாப் போன்று மாற்றி அணிந்துள்ளார். நான் ஒரு கைப்பையில் இருந்து ஆடையை செய்தேன் என்ற தலைப்பில் அவர் பகிர்ந்துள்ள இந்த வீடியோவை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர்.

மேலும் இணைய பயனர்கள் வீடியோவுக்கு பல்வேறு கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News