சவுதி அரேபியாவில் இருந்து உதவி கேட்கும் இளைஞர்: இந்திய தூதரகம் ரியாக்ஷன்..!
- நல்ல சம்பளம் கிடைக்கும் என சவுதி அரேபியா சென்றுள்ளார்.
- உரிமையாளர் கொன்று விடுவதாக மிரட்டுவதாக வீடியோவில் பதிவு.
இந்தியாவைச் சேர்ந்த பல இளைஞர்கள் அதிக சம்பளம் கிடைக்கும் என சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கு செல்கிறார்கள். ஆனால், அவர்களுடைய விருப்பத்திற்கு மாறாக கடுமையான வேலை வழங்கப்படுகிறது. போதுமான சம்பளம் வழங்கப்படுவதில்லை. கபீல் என அழைக்கப்படும் அவர்களுக்கு உத்தரவாதம் அளிக்கும் உரிமையாளர்கள் டிராவல் ஆவணங்களை பறிமுதல் செய்து கொண்டு மிரட்டுவது உண்டு.
இந்தியாவைச் சேர்ந்த ஏராளமானவர்கள் இதுபோன்று சிக்கி தவித்தது உண்டு. இந்திய தூதரகம் மூலம் அவர் மீட்கப்பட்டு இந்தியா வரவழைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் ஒட்டகம் மேய்த்தவாறு, உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர்கள், உதவி கேட்டு வெளியிட்டுள்ள வீடியோ வைரல் ஆகியுள்ளது.
அந்த வீடியோவில், என்னுடைய கிராமம் அலகாபாத்தில் உள்ளது. நான் சவுதி அரேபியாவுக்கு வந்தேன். என்னுடைய பாஸ்போர்ட் கபீலிடம் உள்ளது. என்னுடைய சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என அவரிடம் கூறினேன். அதற்கு அவர் என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார்" எனத் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோ குறித்து சவுதி அரேபியாவில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள பதில் கூறியிருப்பதாவது:-
தூதரகம் இந்த இளைஞர்கள் இருக்கும் இடத்தை கண்டறிய முயற்சி மேற்கொண்டது. அவர் இருக்கும் மாகாணம் அல்லது இடம் அல்லது உரிமையாளர் விரம், தொடர்பு கொள்ளும் எண் குறித்து அதில் தெரிவிக்கவில்லை. இதனால் மேற்கொண்டு நடவடிக்க எடுக்க முடியவில்லை.
இந்த இளைஞகன் போஜ்பூரி மொழியில் பேசுகிறார். பிரயக்ராஜ் மாவட்டத்தை சேர்ந்தவர் என்கிறார். நம்பத்தகுந்த வகையிலான அந்த இளைஞனின் குடும்பத்தின் விவரம் தெரியவந்தால், தொடர்பு கொள்ளும் வகையில் தங்களுக்கு தெரிவிக்க அறிவுறுத்தியுள்ளது.