இந்தியா

இரண்டு பேரை கழற்றிவிட்டு 3ஆவது திருமணம்: ஒரு வாரத்திற்குள் புது மனைவியை அடித்துக் கொன்ற நபர்..!

Published On 2025-05-17 16:42 IST   |   Update On 2025-05-17 16:42:00 IST
  • ஒரு வாரத்திற்கு முன்னதாக 3ஆவது திருமணம் செய்துள்ளார்.
  • அடிக்கடி தகராறு ஏற்பட புது மனைவியை அடித்து கொலை செய்துள்ளார்.

உத்தர பிரதேச மாநிலத்தில் இரண்டு மனைவிகள் உடனான திருமண பந்தம் முறிந்த நிலையில், 3ஆவது திருமணம் செய்த நபர், ஒருவாரத்திற்குள் புது மனைவியை அடித்துக் கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி மாவட்டம் அமாலி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜூ பால் (வயது 44). இவருக்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணம் முடிந்து, இரண்டு மனைவிகளையும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 9ஆம் தேதி ஜான்பூர் மாவட்டச் சேர்ந்த ஆர்த்தி பால் (வயது 26) என்பவரை 3ஆவது முறையாக திருமணம் செய்துள்ளது.

திருமணமாகி ஒரு வாரம் கூட ஆகவில்லை. இவர்களுக்கு இடையில் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இதுபோன்று வாக்குவாதம் ஏற்பட ராஜூ கோபத்தில் மனைவியை கொடூரமாக தாக்கியுள்ளார். இதனால் ஆர்த்தி பால் படுகாயம் அடைந்து கீழே விழுந்துள்ளார். அருகில் உள்ளவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க, போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, ஆர்த்தி பாலை அருகில் உள்ள அரசு மருத்துமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் ஆர்த்தி பாலை பரிசோதித்து ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்பாக போலீசார் ராஜூவை கைது செய்துள்ளனர். திருமணமாகி ஒரு வாரத்திற்குள் மனைவியை அடித்துக் கொலை செய்ய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News