இந்தியா
திருப்பதி- காட்பாடி இடையே இரட்டை ரெயில் பாதை: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
- திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கான இணைப்பு மேம்படும்.
- ஆண்டுக்கு 4 மில்லியன் டன் கூடுதல் சரக்கு போக்குவரத்தை நடக்கும்.
திருப்பதி- காட்பாடி இடையே ரெயில் பாதை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 104 கி.மீ. தூரம் கொண்ட வழித்தடம் 1,332 கோடி ரூபாய் செலவில் இரட்டை பாதையாக மாற்றப்படுகிறது.
இத்திட்டம் மூலம் சுமார் 14 லட்சம் மக்கள் பயன்பெறுவார்கள். திருப்பதி ஏழுமலையான் கோவில் மற்றும் காலகஸ்தி கோவிலுக்கான இணைப்பு மேம்படும். ஆண்டுக்கு 4 மில்லியன் டன் கூடுதல் சரக்கு போக்குவரத்து நடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.