லைவ் அப்டேட்ஸ்... மத்திய பட்ஜெட்: பிரதமர் வீடு கட்டும் திட்டத்திற்காக ரூ.79,000 கோடி நிதி ஒதுக்கீடு
மத்திய பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 12 பைசா அதிகரித்து 81.76 ஆக உள்ளது. நேற்று 2022-23 பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 36 பைசா குறைந்து 81.88 ஆக இருந்தது.
பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாக பட்ஜெட் பிரதிகள் பாராளுமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டன.
மத்திய அமைச்சரவை கூட்டம் நிறைவு- பட்ஜெட்டுக்கு ஒப்புதல்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் நிறைவடைந்தது. 2023-24ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதைத் தொடர்ந்து, நிதி மந்திரி பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார்.
பட்ஜெட் தாக்கலுக்கு முன்னதாக பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் பெறப்படும்.
பட்ஜெட்டுக்கு முன்னதாக பங்குச்சந்தைகளில் உயர்வு
மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இந்திய பங்குச்சந்தைகளில் காலை நேர வர்த்தகத்தில் ஏற்றம் காணப்பட்டது. சென்செக்ஸ் சென்செக்ஸ் 517 புள்ளிகள் உயர்ந்து 60,000-ஐ எட்டியது. நிப்டி 153.15 புள்ளிகள் உயர்ந்து 17,815.30 ஆக இருந்தது.
மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி பாராளுமன்றம் வந்தார்
பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக பாராளுமன்றத்திற்கு வந்தார் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்
நிதியமைச்சக அலுவலகத்தில் இருந்து பாராளுமன்றத்திற்கு பட்ஜெட் ஆவணங்களுடன் புறப்பட்டார் நிர்மலா சீதாராமன். காலை 11 மணிக்கு மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார், நிர்மலா சீதாராமன். அமைச்சரவை கூட்டத்தில் மத்திய பட்ஜெட் ஒப்புதல் பெறப்படும்.
பட்ஜெட் தாக்கலுக்கு முன்பு, ஜனாதிபதி திரவுபதி முர்முவுடன் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் சந்தித்து பேசினார். இன்று பட்ஜெட் தாக்கலாகும் நிலையில் நிதித்துறையின் முக்கிய அதிகாரிகளும் ஜனாதிபதியை சந்தித்தனர். பிரதமர் தலைமையிலான கூட்டத்தில் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் பெறுகிறார் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்.