லைவ் அப்டேட்ஸ்... மத்திய பட்ஜெட்: பிரதமர் வீடு கட்டும் திட்டத்திற்காக ரூ.79,000 கோடி நிதி ஒதுக்கீடு
11.4 கோடி விவசாயிகளுக்கு 2.2 லட்சம் கோடிக்கும் அதிகமான நிதி வழங்கப்பட்டுள்ளது- நிர்மலா சீதாராமன்
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 11.75 கோடி கழிவறைகள் கட்டப்பட்டுள்ளது.
102 கோடி மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது- நிர்மலா சீதாராமன்
இந்தியாவின் பங்கை வலுப்படுத்துவதற்கான ஜி20 நாடுகளின் தலைமைத்துவம் தனித்துவமான ஒரு வாய்ப்பு.
9 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம் 10-வது இடத்திலிருந்து 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
மக்களுக்கு இலவச உணவு தானியங்கள் வழங்க ரூ.2 லட்சம் கோடி செலவானது- நிர்மலா சீதாராமன்
இலவச உணவு தானியங்கள் வழங்கும் திட்டம் மேலும் ஒரு ஆண்டுக்கு ஓர் ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது- நிர்மலா சீதாராமன்
கொரோனா காலத்தில் சிறப்பாக செயல்பட்டோம்- நிர்மலா சீதாராமன்
5-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்
2023-24ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்