null
பாகிஸ்தானுக்கு எதிராக ஐ.நா கவுன்சில் எதுவும் செய்ய முடியாது.. ஆனால் - சசி தரூர் கொடுத்த விளக்கம்!
- பதற்றத்துக்கு மத்தியில் பாகிஸ்தான் ஏவுகணை சோதனைகளை நடத்துவது நிலைமையை மோசமாகும் செயல்
- சீனவை தவிர்த்து மேலும் பல நாடுகள் அதை எதிர்க்கும்.
பஹல்காம் தாக்குதலுக்குப் பின் இந்தியா பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போர் பதற்றம் குறித்து விவாதிக்க நேற்று இரவு ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் கூடியது.
உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர். பிற உறுப்பினர்கள் பாகிஸ்தானிடம் கடுமையான கேள்விகளை கேட்டதாக தெரிகிறது.
பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாதக் அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் கிளை அமைப்பு தாக்குதலில் ஈடுபட்டது குறித்து கவுன்சில் உறுப்பினர்கள் பாகிஸ்தானை விமர்சித்ததாகவும், பொறுப்பேற்கும்படி கூறியாதாகவும் கூறப்படுகிறது.
பதற்றத்துக்கு மத்தியில் பாகிஸ்தான் ஏவுகணை சோதனைகளை நடத்துவது நிலைமையை மோசமாகும் செயல் என்று கூட்டத்தில் பேசப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஐநா சபையின் முன்னாள் அதிகாரியும் திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்.பியுமான சசி தரூர் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதாவது தனக்கு தெரிந்த வரை, இந்தியா அல்லது பாகிஸ்தானுக்கு எதிராக ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் எந்த தீர்மானத்தையும் நிறைவேற்றாது என்று தெரிவித்துள்ளார்.
அவ்வாறான தீர்மானம் ஏதேனும் நிறைவேற்றப்பட்டால் சீனா அதை வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி தோல்வி அடையச் செய்யும். பாகிஸ்தானை விமர்சிக்கும் தீர்மானத்தை கவுன்சில் நிறைவேற்றாது. சீனவை தவிர்த்து மேலும் பல நாடுகள் அதை எதிர்க்கும். ஐநாவில் இந்த விஷயங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதன் சோகமான உண்மை இதுதான்.
இரு நாடுகளையும் நேரடியாகப் பாதிக்கும் எந்தவொரு குறிப்பிட்ட நடவடிக்கைகளையும், முறையான கூட்டங்கள் அல்லது முறைசாரா ஆலோசனைகள் மூலம் கவுன்சில் எடுக்கும் என்று தான் எதிர்பார்க்கவில்லை என்று சசி தரூர் விளக்கினார்.
பாதுகாப்பு கவுன்சிலின் 10 நிரந்தரமற்ற உறுப்பினர்களில் பாகிஸ்தானும் ஒன்று, நேற்று நடந்த கூட்டத்தில் பாகிஸ்தான் கலந்து கொண்டது. அதே நேரத்தில் இந்தியா கலந்து கொள்ளவில்லை.
இதைக்குறித்து பேசிய சசி தரூர், "இந்த சூழ்நிலையில், பாகிஸ்தான் தங்களுக்கு ஒரு நன்மை இருப்பதாக நினைத்திருக்கும். ஆனால் கவுன்சிலின் பல பிரதிநிதிகள் பாகிஸ்தானிடம் மிகவும் கடினமான கேள்விகளைக் கேட்டதாக தெரிகிறது. குறிப்பாக லஷ்கர்-இ-தொய்பாவுக்கு தாக்குதலில் தொடர்பு உள்ளது பற்றி கேள்வி எழுப்பப்பட்டுள்ளது" என்று அவர் மேலும் கூறினார்.