இந்தியா

தெலுங்கானாவில் லாரி - பேருந்து மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழப்பு

Published On 2025-05-20 08:41 IST   |   Update On 2025-05-20 08:41:00 IST
  • விகாராபாத் மாவட்டத்தில் உள்ள பரிகியில் சிமெண்ட் ஏற்றி வந்த லாரியும் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
  • உயிரிழந்த 4 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தெலுங்கானா மாநிலம் விகாராபாத் மாவட்டத்தில் உள்ள பரிகியில் சிமெண்ட் ஏற்றி வந்த லாரியும் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விபத்தில் காயமடைந்த 17 பேரை மீட்டு சிகிச்சைக்காக பல்வேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததனர்.

உயிரிழந்த 4 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News