இந்தியா
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி எதிரொலி - இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் வர்த்தகம்
- 2025-26-ம் நிதியாண்டின் முதல் வர்த்தக நாளான இன்று பங்குசந்தை சரிவுடன் தொடங்கியது.
- அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்துள்ள பரஸ்பர வரி நாளை முதல் அமலுக்கு வருகிறது
2025-26-ம் நிதியாண்டின் முதல் வர்த்தக நாளான இன்று பங்குசந்தை சரிவுடன் தொடங்கியது.
இன்று வர்த்தகம் தொடங்கியவுடன் நிப்டி 178 புள்ளிகள் சரிந்து 23,341 ஆகவும், சென்செக்ஸ் 536 புள்ளிகள் சரிந்து 76,878 ஆகவும் வர்த்தகமானது.
காலை 10. 30 நிலவரப்படி நிப்டி 23,292.25 புள்ளியாகவும் சென்செக்ஸ் 76,511.96 புள்ளியாகவும் தொடர்ந்து சரிவை கண்டது.
மதியம் 12.15 மணி நிலவரப்படி நிப்டி 23,240 புள்ளியாகவும் சென்செக்ஸ் 76,269 புள்ளியாகவும் தொடர்ந்து சரிவை கண்டது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்துள்ள பரஸ்பர வரி நாளை முதல் அமலுக்கு வரும் நிலையில் உலகளாவிய சந்தைகளில் நிச்சயமற்ற சூழல் நிலவுகிறது.