கட்சி தலைவர் தேர்வு: மேலிடம் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தெலங்கானா மாநில பாஜக எம்எல்ஏ ராஜினாமா
- என். ராமசந்தர் ராவ் தேர்வு செய்யப்படலாம் எனத் தகவல்.
- தகுதியான பல தலைவர்கள் இருப்பதாக எம்.எல்.ஏ. எதிர்ப்பு.
தெலங்கானா மாநில பாஜக-வின் அடுத்த தலைவராக என். ராமசந்தர் ராவ் நியமிக்கப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலிடத்தின் இந்த முடிவுக்கு தெலங்கானா எம்எல்ஏ டி. ராஜா சிங் எதிர்ப்பு தெரிவித்து கட்சிப் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
தனது கட்சிப் பதவி ராஜினாமா கடிதத்தை மத்திய அமைச்சர் மற்றும் தற்போதைய தலைவர் ஜி. கிஷன் ரெட்டிக்கு அனுப்பியுள்ளார். அதில் "ராமசந்தர் ராவ் தலைவராக நியமிக்கப்பட இருப்பதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த முடிவு அதிர்ச்சியும், ஏமாற்றமும் அளிக்கிறது. எனக்கு மட்டுமல்ல, கட்சியின் ஏற்றத்தாழ்வில் நின்ற லட்சக்கணக்கான தொண்டர்கள், தலைவர்கள், வாக்காளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தெலுங்கானாவில் பாஜக தனது முதல் அரசாங்கத்தை அமைக்கும் வாசலில் நிற்கும் நேரத்தில், இதுபோன்ற ஒரு தேர்வு நாம் செல்லும் திசை குறித்து கடுமையான சந்தேகங்களை எழுப்புகிறது. பதவிக்கு பொறுத்தமான ஏராளமான தலைவர்கள் உள்ளனர்" எனக் குறிப்பிட்டுள்ளார்.