இந்தியா

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் வேட்புமனு தாக்கல்

Published On 2023-11-09 07:27 GMT   |   Update On 2023-11-09 07:27 GMT
  • தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.
  • கமரெட்டி தொகுதியில் மாநில தலைவரை அவருக்கு எதிராக நிறுத்தியுள்ளது காங்கிரஸ்.

119 தொகுதிகளை கொண்ட தெலுங்கானாவில் வருகிற 30-ந்தேதி சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. நாளை வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும்.

அம்மாநில முதல்வரும் பாரதிய ராஷ்ரிய சமிதி கட்சி தலைவருமான சந்திரசேகராவ் கமரெட்டி மற்றும் கஜ்வெல் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். இந்த நிலையில், இன்று கஜ்வெல் தொகுதியில் போட்டியிடுவதற்கு வேட்புமனு தாக்கல் செய்தார்.

13-ந்தேதி வேட்புமனு மீதான பரிசீலனை நடைபெறுகிறது. 15-ந்தேதி வேட்புமனு திரும்பப்பெற கடைசி நாளாகும். அன்றைய தினம் ஒவ்வொரு தொகுதிகளிலும் போட்டியிடுபவர்களின் பெயர்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.

வேட்புமனு தாக்கல் செய்த கடைசி நாளான நாளை கமரெட்டியில் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கமரெட்டில் காங்கிரஸ் சார்பில், அக்கட்சியின் மாநில தலைவர் ரேவந்த் ரெட்டி நிறுத்தப்பட்டுள்ளார்.

Tags:    

Similar News