இந்தியா

ஆண் குழந்தைக்கு தந்தை ஆன தேஜஸ்வி.. நேரில் சென்று வாழ்த்திய மம்தா பானர்ஜி!

Published On 2025-05-27 20:50 IST   |   Update On 2025-05-27 20:51:00 IST
  • தேஜஸ்வி யாதவ்க்கு ராஜ்ஸ்ரீ என்பவருடன் கடந்த 2021 இல் திருமணம் நடந்தது.
  • தந்தை மற்றும் தாயை போன்றே ராஜ்ஸ்ரீயின் குழந்தை மிகவும் அழகாக உள்ளது என்றார்.

பீகாரின் ராஷ்டிரிய ஜனதா தளம் மூத்த தலைவரும் முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் ஆண் குழந்தைக்குத் தந்தை ஆனார்.

ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ் உடைய இளைய மகனான தேஜஸ்வி யாதவ்க்கு ராஜ்ஸ்ரீ என்பவருடன் கடந்த 2021 இல் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு காத்யாயினி என்ற பெண் குழந்தை உள்ளது.

இதனிடையே, ராஜ்ஸ்ரீ 2வது முறை கர்ப்பமடைந்த நிலையில் அவர் மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டார். அதன்படி ராஜ்ஸ்ரீக்கு இன்று ஆண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில், தேஜஸ்வி - ராஜ்ஸ்ரீ தம்பதிக்கு பிறந்த குழந்தையை பார்க்க மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி மருத்துவமனைக்கு வந்தார்.

குழந்தையை பார்த்தப்பின் தேஜஸ்வி - ராஜ்ஸ்ரீ தம்பதியை சந்தித்து மம்தா வாழ்த்து கூறினார். ராஜ்ஸ்ரீ மற்றும் தேஜஸ்வியை சந்தித்தப்பின் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, தந்தை மற்றும் தாயை போன்றே ராஜ்ஸ்ரீயின் குழந்தை மிகவும் அழகாக உள்ளது' என்றார்.

Tags:    

Similar News