மின் சப்ளை பாதிப்பால் அகமதாபாத் விமானம் விபத்து ஏற்பட்டதா?- தொழில்நுட்பக் குழு ஆய்வு
- இந்த விமானம் ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 2 எஞ்சின்களால் இயக்கப்பட்டது.
- விமானம் புறப்பட்ட பிறகு உயரத்தை அடைய சிரமப்படுவதையும் பின்னர் கீழே விழுந்து நொறுங்கியதையும் விமான விபத்தின் வீடியோ பதிவுகள் காட்டியுள்ளதாக தெரியவந்துள்ளது.
கடந்த மாதம் அகமதாபாத்திலிருந்து லண்டன் புறப்பட்ட விமானம் புறப்பட்ட சில வினாடிகளிலேயே விழுந்து நொறுங்கியது. விமானத்தில் பயணித்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விமான நிறுவனம் ஆய்வு நடத்தி வருகிறது.
விமானிகள் பரிசோதித்ததில் தரையிறங்கும் கியர் பயன்படுத்தப்பட்டது மற்றும் விமான இறக்கைகள் சரியாக செயல்படாதது மட்டும் விமான விபத்துக்கு காரணமல்ல என்பதை கண்டறிந்தனர்.
அவசரகாலத்தில் பயன்படும் பவர் டர்பைன் செயலிழந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம் என விமான விபத்து குறித்து விசாரிக்கும் இந்தியாவின் விசாரணை அமைப்பான ஏ.ஏ.ஐ.பி. வேறு ஒரு கோணத்தில் ஆய்வுகளை மேற்கொண்டது.
இந்த விமானம் ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 2 எஞ்சின்களால் இயக்கப்பட்டது. விமானம் புறப்பட்ட பிறகு உயரத்தை அடைய சிரமப்படுவதையும் பின்னர் கீழே விழுந்து நொறுங்கியதையும் விமான விபத்தின் வீடியோ பதிவுகள் காட்டியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த விபத்து தொடர்பாக அமெரிக்காவின் போயிங் விமான நிறுவனம் கருத்து தெரிவிக்க மறுத்துள்ள நிலையில், இந்தியாவின் ஏ.ஏ.ஐ.பி.-யிடம் எந்த கேள்விகளையும் முன்வைக்கவில்லை. இந்த நிலையில் ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனமும் விசாரணை குறித்து எந்தவித கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை எனக் கூறியுள்ளது.
ஏ.ஏ.ஐ.பி. மற்றும் ஏர் இந்தியா நிறுவனமும் இது தொடர்பாக பதிலளிக்க மறுத்துள்ளது.