இந்தியா

திருமண விழாவில் நடனமாட மறுத்த சிறுமி தீ வைத்து எரிப்பு

Published On 2023-01-20 15:26 IST   |   Update On 2023-01-20 15:26:00 IST
  • நடனமாட மறுத்த ஒரு சிறுமியை 2 வாலிபர்கள் கடத்திச் சென்று பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்தனர்.
  • சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அங்கு ஓடி வந்த பொதுமக்கள் தீயை அணைத்து ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

பீகார் மாநிலம் வைசாலி மாவட்டம் பகுரா கிராமத்தில் ஒரு திருமண விழா நடைபெற்றது. திருமண விழாவில் பெண்கள், சிறுமிகள் பலர் நடனமாடினார்கள். அப்போது அந்த பகுதியைச் சேர்ந்த வாலிபர்கள் தங்களுடன் நடனமாடுமாறு பெண்களையும், சிறுமிகளையும் கட்டாயப்படுத்தினார்கள். அதற்கு அவர்கள் மறுத்தனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த 2 வாலிபர்கள் மறுநாள் காலையில் நடனமாட மறுத்த ஒரு சிறுமியை கடத்திச் சென்று பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்தனர். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அங்கு ஓடி வந்த பொதுமக்கள் தீயை அணைத்து ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இது தொடர்பாக அந்த பகுதியைச் சேர்ந்த பிரசாந்த்குமார் (18), பிரதீக்குமார் (20) ஆகிய 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News