இந்தியா

சுரங்க விபத்து.. சிக்கியவர்களுக்கு சீட்டுக் கட்டு, செஸ் போர்டு..

Published On 2023-11-24 11:37 GMT   |   Update On 2023-11-24 11:37 GMT
  • மீட்பு பணிகள் 13-வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
  • ஊழியர்கள் எப்போது மீட்கப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள உத்தர்காஷியில் சுரங்கம் தோண்டும் பணியின் போது திடீரென ஏற்பட்ட விபத்தால் சுரங்கத்தின் ஒரு பகுதி மூடியது. இதன் காரணமாக அங்கு பணியில் ஈடுபட்டு வந்த 41 தொழிலாளர்களும் சுரங்கத்திற்குள் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்கும் பணிகள் 13-வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தற்போது வரை சுரங்கத்தில் சிக்கியவர்களுக்கு தேவையான உணவு அதற்கென உருவாக்கப்பட்ட குழாய் மூலம் தொடர்ந்து அனுப்பப்பட்டு வருகிறது. மீட்பு பணிகளின் போது பல்வேறு இடர்பாடுகள் ஏற்படுவதால் மீட்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் சிக்கியுள்ள ஊழியர்கள் 41 பேரும் எப்போது மீட்கப்படுவர் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்களின் மனநிலையை சீராக வைத்துக் கொள்ளும் முயற்சியாக அவர்களுக்கு செஸ் போர்டு மற்றும் சீட்டுக் கட்டு உள்ளிட்டவைகளை அனுப்ப மீட்பு படையினர் திட்டமிட்டுள்ளனர். 13 நாட்களாக சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்களின் இக்கட்டான சூழ்நிலையில், அவர்கள் மனதளவில் உறுதியாக வைத்துக் கொள்ள இவை உதவியாக இருக்கும் என்று மீட்பு படையினர் நம்புகின்றனர்.  

Tags:    

Similar News