இந்தியா

உத்தரபிரதேசத்தில் 3 வயது குழந்தையை கற்பழித்த ஆசாமிக்கு 26 ஆண்டு சிறை

Published On 2023-11-05 08:43 IST   |   Update On 2023-11-05 08:43:00 IST
  • குழந்தையின் நிலையைக் கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
  • குற்றவாளிக்கு 26 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனையும், ரூ.50 ஆயிரத்து 500 அபராதமும் விதிக்கப்பட்டது.

கன்னோஜ்:

உத்தரபிரதேச மாநிலம் கன்னோஜ் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 50 வயது ஆசாமி ராஜேஷ் ஜாதவ் என்ற மகாத்மா.

இவர் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் 2-ந்தேதி, தனது வீட்டின் அருகில் வசிக்கும் 3 வயது பெண்குழந்தையை கடத்திச்சென்று, அருகில் உள்ள ஒரு வீட்டில் வைத்து கற்பழித்துவிட்டார்.

அந்த குழந்தையின் நிலை மோசமடைந்ததால் அதை அங்கேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றுவிட்டார்.

குழந்தை வீறிட்டு அழும் சத்தம் கேட்டு அங்கு சென்ற குடும்பத்தினர், அதன் நிலையைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். குழந்தையை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

ராஜேஷ் ஜாதவ் பின்னர் கைது செய்யப்பட்டார். சாட்சியங்கள் மற்றும் மருத்துவ அறிக்கையின் அடிப்படையில், ராஜேஷ் ஜாதவ் குற்றவாளி என 'போக்சோ' சட்ட சிறப்பு நீதிபதி அல்கா யாதவ் நேற்று முன்தினம் தீர்ப்பு அளித்தார்.

அவர் குற்றவாளிக்கு 26 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனையும், ரூ.50 ஆயிரத்து 500 அபராதமும் விதித்தார். அபராத தொகையை செலுத்த தவறினால் அவர் மேலும் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:    

Similar News