இந்தியா

மாணவர்கள் தினமும் செய்தித்தாள்களைப் படிக்க வேண்டும்- உ.பி முதல்வர் அறிவுரை

Published On 2022-06-22 15:03 IST   |   Update On 2022-06-22 18:09:00 IST
  • பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற 10 மாணவர்களுடன் முதல்வர் யோகி ஆதித்யநாத் வாழ்த்து தெரிவித்து உரையாடினார்.
  • செய்தித்தாள்களை படிப்பதன் மூலம், வரவிருக்கும் போட்டித் தேர்வுகளுக்கு நீங்கள் புதுப்பித்த நிலையில் இருப்பீர்கள்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற 10 மாணவர்களுடன் முதல்வர் யோகி ஆதித்யநாத் வாழ்த்து தெரிவித்து உரையாடினார்.

அப்போது பேசிய அவர், மாணவர்கள் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராவதற்கு உதவும் என்பதால் மாணவர்கள் நூலகங்களுக்கு சென்று செய்தித்தாள்களை தவறாமல் படிக்க வேண்டும் என்று உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவுரை வழங்கியுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

மாணவர்களின் நலனுக்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. மாணவர்கள் பிரதமர் மோடிக்கு அவர் தொடங்கியுள்ள திட்டங்களுக்கு நன்றி தெரிவித்து அஞ்சல் அட்டைகளை அனுப்ப வேண்டும்.

செய்தித்தாள்களை படிப்பதன் மூலம், வரவிருக்கும் போட்டித் தேர்வுகளுக்கு நீங்கள் புதுப்பித்த நிலையில் இருப்பீர்கள். மாநில அரசின் அப்யுதயா திட்டம் மாணவர்கள் அவர்கள் எழுதத் திட்டமிட்டுள்ள பல்வேறு போட்டித் தேர்வுகளுக்குச் சித்தப்படுத்துகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News