இந்தியா

கேரள மாநிலம் கொச்சி விமான நிலையத்தில் வெடிகுண்டு பீதியை கிளப்பியவர் கைது

Published On 2022-07-03 10:53 IST   |   Update On 2022-07-03 10:53:00 IST
  • விமான நிலையத்தை அடைந்த அவர்கள் அவசர அவசரமாக புறப்பட தயாராக இருந்தனர்.
  • விமான நிலைய பாதுகாப்பு பிரிவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் கொச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு, சனிக்கிழமை அதிகாலை 63 வயது முதியவர் மனைவியுடன் விமானம் மூலம் வெளிநாடு செல்ல வந்தார்.

அதிகாலை 1.30 மணியளவில் விமான நிலையத்தை அடைந்த அவர்கள் அவசர அவசரமாக புறப்பட தயாராக இருந்தனர். ஆனால் செக்-இன் கவுன்டரில் இருந்த ஊழியர்கள், அவர்களது உடமைகளை சோதனை செய்வதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது.

இது முதியவருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் தனது பெட்டியில் வெடிகுண்டு இருப்பதாக அவர் கூறினார். இது விமான நிலையத்தில் பீதியைத் தூண்டியது.அதைத் தொடர்ந்து விமான நிலைய பாதுகாப்பு பிரிவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அவர்கள் விரைந்து வந்து முதியவரை பிடித்து நெடுவாசல் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அந்த நபரை கைது செய்து விசாரணை நடத்தினர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

Tags:    

Similar News