இந்தியா

வெளிநாட்டில் நடந்த பட்டமளிப்பு விழாவில் தேசிய கொடியுடன் நடந்து வந்த இந்திய மாணவர்

Published On 2023-08-14 10:46 IST   |   Update On 2023-08-14 10:46:00 IST
  • வீடியோ எடுக்கப்பட்ட இடம் குறித்த தகவல் வெளியாகவில்லை.
  • வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் அந்த மாணவரை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

வெளிநாட்டில் நடந்த பட்டமளிப்பு விழா ஒன்றில் இந்திய மாணவர் மேடையில் தேசிய கொடியுடன் நடந்து வந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஐ.ஏ.எஸ். அதிகாரி அவனிஷ் ஷரன் டுவிட்டரில் பகிர்ந்துள்ள அந்த வீடியோவில், பட்டமளிப்பு விழாவுக்காக இந்திய மாணவர் பாரம்பரிய ஆடையான குர்தா மற்றும் வேட்டியுடன் மேடை ஏறி உள்ளார். மேலும் பட்டப்படிப்புக்கான அங்கியுடன் மேடையில் நடந்து சென்ற அவர் அங்கிருக்கும் முக்கிய பிரமுகர்களை கைகூப்பி நமஸ்தே என வணக்கம் சொல்கிறார்.

பின்னர் அவர் தனது பட்டத்தை வாங்குவதற்காக சென்ற போது பாக்கெட்டில் இருந்து மூவர்ண கொடியை எடுத்து பார்வையாளர்களுக்கு காட்டுகிறார். அதன் பிறகு பட்டம் பெற்ற அவரை பார்வையாளர்கள் கைதட்டி ஆரவாரம் செய்து வாழ்த்துகின்றனர். இந்த வீடியோ வைரலாகி 7.4 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும், 34 ஆயிரத்துக்கும் அதிகமான விருப்பங்களையும் குவித்துள்ளது.

அதேநேரம் இந்த வீடியோ எடுக்கப்பட்ட இடம் குறித்த தகவல் வெளியாகவில்லை. வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் அந்த மாணவரை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். இந்த இளைஞனுக்கு சல்யூட் என ஒரு பயனரும், இது உண்மையிலேயே அற்புதமானது என மற்றொரு பயனரும், ஜெய்ஹிந்த் என ஒருவரும் பதிவிட்டுள்ளனர்.

Tags:    

Similar News