இந்தியா

பாம்புடன் போட்டோஷூட் நடத்திய மணமக்கள்

Published On 2023-06-03 04:30 GMT   |   Update On 2023-06-03 04:30 GMT
  • இணையத்தில் வைரலாகும் ஒரு வீடியோவில் ஒரு ஆணும், ஒரு பெண்ணும் திருமணத்திற்கு முந்தைய நாள் பாம்பை வைத்து போட்டோஷூட் நடத்தி உள்ளனர்.
  • இருவரும் எப்படி சந்தித்து இறுதியில் காதலில் விழுந்தார்கள் என்பதை சொல்வது போல் புகைப்படங்கள் உள்ளன.

சமீப காலமாக திருமண போட்டோஷூட்டுகளுக்காக மணமக்கள் செய்யும் வித்தியாசமான செயல்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆவதோடு சில நேரங்களில் விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது.

அந்த வகையில் தற்போது இணையத்தில் வைரலாகும் ஒரு வீடியோவில் ஒரு ஆணும், ஒரு பெண்ணும் திருமணத்திற்கு முந்தைய நாள் பாம்பை வைத்து போட்டோஷூட் நடத்தி உள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் ஒரு கதையை சொல்வதாக இருக்கிறது. இவர்கள் இருவரும் எப்படி சந்தித்து இறுதியில் காதலில் விழுந்தார்கள் என்பதை சொல்வது போல் புகைப்படங்கள் உள்ளன. முதலில் ஒரு வீட்டின் கொல்லைப்புறத்தில் மணமகள் நடந்து வரும்போது ஒரு பாம்பை பார்க்கிறார்.

உடனே அவர் பாம்பு பிடிப்பவரை உதவிக்கு அழைக்கிறார். அவர் அங்கு வந்ததும் பெண்ணை பார்த்து சிரித்துக்கொண்டே இருக்கிறார். அதன் பிறகு பாம்பை கையில் பிடித்துக்கொண்டு செல்லும்போது தன்னை தொடர்பு கொள்ளுமாறு செய்கை செய்கிறார். கடைசியில் 2 பாம்புகள் ஒன்றாக காட்டப்பட்டுள்ளது. இந்த புகைப்படங்கள் வைரலாகி வரும் நிலையில் சமூகவலைதள பயனர்கள் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். ஒருசிலர் மணமக்களை வாழ்த்தியும், சிலர் விமர்சித்தும் கருத்துக்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News