இந்தியா

போலீசார் செல்போனை பிடுங்கியதால் தீ வைத்துக்கொண்ட வாலிபர்

Published On 2024-02-02 10:01 GMT   |   Update On 2024-02-02 10:01 GMT
  • சந்தோஷ் நீண்ட நேரம் கெஞ்சிப் பார்த்தும் போலீசார் செல்போனை தர மறுத்து விட்டனர்.
  • உடல் முழுவதும் தீ பற்றி எரிந்தாலும் சந்தோஷ் சாதாரணமாக சாலையில் நடந்து சென்றார்.

திருப்பதி:

தெலுங்கானா மாநிலம், சங்க ரெட்டி மாவட்டம், ராஜம்பேட்டையை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 37). தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார்.

வேலைக்குச் சென்ற சந்தோஷ் மீண்டும் வீடு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

போதி ரெட்டி பள்ளி சந்திப்பில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இதனை சந்தோஷ் செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார்.

சந்தோஷ் தங்களை வீடியோ எடுப்பதை கண்ட போலீசார் அவரது செல்போனை பறித்தனர். சந்தோஷ் நீண்ட நேரம் கெஞ்சிப் பார்த்தும் போலீசார் செல்போனை தர மறுத்து விட்டனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த சந்தோஷ் அருகில் உள்ள பெட்ரோல் பங்கிற்க்கு சென்று பாட்டிலில் பெட்ரோலை பிடித்துக் கொண்டு வந்தார்.

போலீசார் முன்னிலையில் தனது உடலில் பெட்ரோலை ஊற்றிக் கொண்டு தீ வைத்தார். தீ மளமளவென உடல் முழுவதும் பரவியது.

உடல் முழுவதும் தீ பற்றி எரிந்தாலும் சந்தோஷ் சாதாரணமாக சாலையில் நடந்து சென்றார்.

அந்த வழியாக வாகனங்களில் வந்தவர்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு சந்தோஷ் உடலில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர்.

இதனைக் கண்டு பதறிய போலீசார் சந்தோசை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

சந்தோஷ் உடல் 50 சதவீதம் கருகி உள்ளதால் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

வாலிபர் உடலில் தீயுடன் நடந்து செல்லும் வீடியோ காட்சிகள் பரவி வருகிறது.

Tags:    

Similar News