இந்தியா

தன்னை பார்த்து கையசைத்த சிறுவனுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

Published On 2024-02-12 08:25 GMT   |   Update On 2024-02-12 08:25 GMT
  • ஜபுவா மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார்.
  • மேடையில் இருந்து பிரதமர் மோடி கவனித்தார். உடனே அவர் அந்த சிறுவனிடம் பேசினார்.

போபால்:

பிரதமர் நரேந்திர மோடி மத்திய பிரதேச மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கு ரூ.7,500 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் ஜபுவா மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். பிரதமர் மோடி பேசிக் கொண்டிருந்தபோது அவரை பார்த்து உற்சாகமடைந்த சிறுவன் ஒருவன் அவரை நோக்கி உற்சாகமாக கையசைத்துக் கொண்டே இருந்தான்.

இதை மேடையில் இருந்து பிரதமர் மோடி கவனித்தார். உடனே அவர் அந்த சிறுவனிடம் பேசினார். 'மகனே, உன் அன்பை நான் பெற்றுவிட்டேன். தயவு செய்து உன் கையை தாழ்த்தி சாதாரணமாக வைத்துக் கொள். இல்லாவிட்டால் கை வலிக்க தொடங்கும்' என்றார்.

பிரதமர் மோடியின் சிறுவனை பார்த்து கூறிய இந்த வார்த்தைகள் கூட்டத்தில் இருந்த பொதுமக்கள் அனைவரையும் கவர்ந்தது. இந்த நிலையில் பிரதமர் மோடியை பார்த்து சிறுவன் கையசைத்ததும், சிறுவனை பார்த்து பிரதமர் மோடி பேசியதும் வீடியோவாக இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

Tags:    

Similar News