இந்தியா

நாட்டின் ஒற்றுமையை உடைக்க முயற்சிப்போருக்கு எதிராக நாம் உறுதியாக நிற்க வேண்டும்- பிரதமர் மோடி

Published On 2022-10-31 06:48 GMT   |   Update On 2022-10-31 08:57 GMT
  • நாட்டு மக்களை ஜாதி, பிரதேசம், மொழியின் பெயரால் சண்டையிட்டு பிரிய விரும்புகிறார்கள்.
  • பல நேரங்களில் எதிரி, அடிமை மனநிலையின் வடிவத்திலும் நமக்குள் நுழைகிறது என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளான இன்று குஜராத் கெவாடியாவில் உள்ள ஒற்றுமை சிலைக்கு பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் அவர், மோர்பி பாலம் அறுந்து விழுந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து உணர்ச்சிவசப்பட்டு பிரதமர் மோடி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியாவின் ஒற்றுமை நமது எதிரிகளுக்கு வேதனை அளிக்கிறது. ஒற்றுமையை உடைக்கும் முயற்சிகளில் எதிரிகள் ஈடுபட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இது இருந்தது. கடந்த காலத்தில் அவர்கள் நம்மை ஆட்சி செய்யும் போதெல்லாம் அதை உடைக்க முயன்றனர்.

அனைத்து வெளிநாட்டு சக்திகளும் இந்த ஒற்றுமையை உடைக்க அவர்கள் விரும்பியதை செய்தார்கள். நீண்ட காலத்தில் பரப்பப்பட்ட விஷமாகும். அதன் காரணமாக நாடு இன்னும் பிரச்சினைகளை எதிர்கொள்கிறது. அவர்கள் நாட்டு மக்களை சாதி, மண்டலம், மொழியின் பெயரால் சண்டையிட விரும்புகிறார்கள்.

நமது ஒற்றுமையை உடைக்க முயல்பவர்கள் நமது வெளிப்படையான எதிரிகள் மட்டுமல்ல. உள்ளே இருக்கும் யாரோ ஒருவர் கூட இருக்கலாம்.

இந்த நாட்டின் மகனாக நாம் அவர்களுக்கு பதில் சொல்ல வேண்டும். நாம் ஒன்றாக உறுதியாக நிற்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News