இந்தியா

கிணற்றிலிருந்து எரிமலை போல 10 அடி உயரம் தீயை கக்கியதால் பொதுமக்கள் பீதி- ஆந்திராவில் பரபரப்பு

Published On 2023-07-16 04:32 GMT   |   Update On 2023-07-16 04:32 GMT
  • கிணற்றிலிருந்து தண்ணீர் எடுப்பதற்காக உரிமைாளர் மோட்டாரை ஆன் செய்தார்.
  • அதிகாரிகள் ஆய்வில் ஆழ்துளை கிணறு மொத்தம் 250 அடியில் அமைக்கப்பட்டிருப்பதை அறிந்தனர்.

திருமலை:

ஆந்திர-மாநிலம், அம்பேத்கர் கோன சீமா மாவட்டம் ராஜோலு மண்டலம் சிவகோடு பகுதியில் ஆழ்துளை கிணறு ஒன்று உள்ளது.

அதிலிருந்து தண்ணீர் எடுப்பதற்காக உரிமைாளர் மோட்டாரை ஆன் செய்தார். அப்போது, 30 அடி வரை தண்ணீரும், 10 அடி உயரத்திற்கு தீயை கக்கியது.

இதுகுறித்து பேரிடர் மேலாண்மை குழுவினருக்கு இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் ஆய்வு செய்த போது 20 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தி கைவிடப்பட்ட கியாஸ் பைப் லைன் இருப்பதாகவும், இது பல ஆண்டுகளாக பயன்படுத்தாமல் உள்ள நிலையில் இதில் இருந்து எரிவாயு கசிவு ஏற்பட வாய்ப்பு இல்லை என அதிகாரிகள் கூறினர்.

அதிகாரிகள் ஆய்வில் ஆழ்துளை கிணறு மொத்தம் 250 அடியில் அமைக்கப்பட்டிருப்பதை அறிந்தனர். மேலும் பூமிக்கு அடியில் இருந்து இயற்கையாக வெளியேறிய கியாஸ் தீயை கக்கியது தெரியவந்தது.

இதையடுத்து மண் ஆகியவற்றை நிரப்பி ஆழ்துளை கிணற்றை மூடினர். கிணற்றிலிருந்து தீ வந்ததால் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News