இந்தியா

தேர்தல் நேரத்தில் சொன்னதை தி.மு.க. செய்ய வேண்டும்- எல்.முருகன் பேட்டி

Published On 2023-03-26 10:23 IST   |   Update On 2023-03-26 10:23:00 IST
  • தி.மு.க. அரசின் பட்ஜெட் மக்களுடைய எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் இல்லை.
  • ராகுலின் தகுதி இழப்பு விவகாரம் கோர்ட்டு தீர்ப்பை தொடர்ந்து முழுக்க முழுக்க சட்டப்படி நடந்துள்ளது.

திருமலை:

மத்திய மந்திரி எல். முருகன் திருப்பதியில் நேற்று தரிசனம் செய்தார். வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானை வழி பட்ட அவருக்கு தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

பின்னர் மத்திய மந்திரி எல்.முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தி.மு.க. அரசின் பட்ஜெட் மக்களுடைய எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் இல்லை. கடந்த பட்ஜெட்டில் பட்டியல் இன மக்களின் மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை தி.மு.க. அரசு முழுவதுமாக செலவு செய்யவில்லை. இதுகுறித்து எங்கள் கட்சி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் சட்டசபையில் கேள்விகள் கேட்டுள்ளார்.

தேர்தல் நேரத்தில், குடும்ப தலைவிகள் அனைவருக்கும் தலா ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும். என்று தி.மு.க. வாக்குறுதி அளித்தது.

ஆனால் இப்போது தகுதியான குடும்பத் தலைவிகளுக்கு மட்டுமே ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அரசு கூறுகிறது.

இந்த விஷயத்தில் அவர்கள் தேர்தல் நேரத்தில் சொன்னதை செய்ய வேண்டும். ராகுலின் தகுதி இழப்பு விவகாரம் கோர்ட்டு தீர்ப்பை தொடர்ந்து முழுக்க முழுக்க சட்டப்படி நடந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News