இந்தியா

ஜே.இ.இ. நுழைவுத்தேர்வு வருகிற 25-ந்தேதிக்கு மாற்றம்: மத்திய அரசு அறிவிப்பு

Published On 2022-07-21 04:52 GMT   |   Update On 2022-07-21 04:52 GMT
  • வெளிநாடுகளில் உள்ள 17 இடங்கள் உள்பட இந்தியா முழுவதும் 500 நகரங்களில் உள்ள பல்வேறு மையங்களில் ஜே.இ.இ. நுழைவுத்தேர்வு நடைபெறுகிறது.
  • மாணவ- மாணவிகள் தங்களுடைய விண்ணப்ப எண், பிறந்த தேதி அல்லது கடவுச்சொல் கொடுத்து ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யுமாறு என்.டி.ஏ. தெரிவித்துள்ளது.

புதுடெல்லி:

ஐ.ஐ.டி, என்.ஐ.டி, ஐ.ஐ.ஐ.டி, போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் பி.இ., பி.டெக், பி.பிளான், பி.ஆர்க். உள்ளிட்ட என்ஜினீயரிங் படிப்பில் தகுதியான மாணவ-மாணவிகளை சேர்ப்பதற்காக இந்திய அரசு கல்வி அமைச்சகத்தின் தேசிய தேர்வு முகமை சார்பாக ஜே.இ.இ. நுழைவுத் தேர்வு வருடத்திற்கு 2 முறை நடத்தப்படுகிறது.

நடப்பு கல்வி ஆண்டுக்கான பகுதி-1 ஜே.இ.இ. முதன்மை நுழைவுத் தேர்வு -2022 கடந்த ‌ஜூன் மாதம் 24-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை நடைபெற்றது. இதில் பிளஸ்- 2 தேர்ச்சி பெற்ற மாணவ- மாணவிகள் ஏராளமானோர் பங்கேற்று எழுதினர்.

2-ம் கட்ட நுழைவுத்தேர்வு வருகிற 21-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த தேர்வு வருகிற 25-ந்தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சேலம், நாமக்கல் மாணவ- மாணவிகள் உள்பட 6 லட்சத்து 29 ஆயிரத்து 778 பேர் பங்கேற்க உள்ளனர்.

வெளிநாடுகளில் உள்ள 17 இடங்கள் உள்பட இந்தியா முழுவதும் 500 நகரங்களில் உள்ள பல்வேறு மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. இதற்கான ஹால்டிக்கெட் இன்று வெளியிடப்பட்டது.

மாணவ- மாணவிகள் தங்களுடைய விண்ணப்ப எண், பிறந்த தேதி அல்லது கடவுச்சொல் கொடுத்து ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யுமாறு என்.டி.ஏ. தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News