இந்தியா

கொலை வழக்கு குற்றவாளி குத்திக்கொலை

Published On 2024-02-28 05:10 GMT   |   Update On 2024-02-28 05:10 GMT
  • லால்ஜூ ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.
  • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் ஏலூர் கச்சேரிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் லால்ஜூ. இவர் கடந்த 2021-ம் ஆண்டு கும்பலங்கி பகுதியில் நடந்த ஆணடனி லாசர் என்பவர் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் ஆவார். நேற்று இரவு பள்ளுருத்தி பகுதியில் இரு தரப்பினருக்கிடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.

இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் லால்ஜூ மற்றும் பள்ளுருத்தியை சேர்ந்த ஜோஜி ஆகிய இருவருக்கும் கத்திக்குத்து விழுந்தது. இதில் படுகாயமடைந்த இருவரும் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் லால்ஜூ ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். அவரது உடல், பிரேத பரிசோதனைக்காக எர்ணாகுளம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது.

ஜோஜி ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து சம்பந்தப்பட்டவர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News