இந்தியா
கேரள முதல்-மந்திரியின் கூடுதல் செயலாளரிடம் 10 மணி நேரம் அமலாக்கத்துறையினர் விசாரணை
- கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனின் கூடுதல் தனி செயலாளரான ரவீந்திரன் அமலாக்கத்துறை முன்பு ஆஜரானார்.
- ரவீந்திரனிடம் அதிகாரிகள் சுமார் 10 மணி நேரம் விசாரணை நடத்தினர். இது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேரளாவில் ஏழைகளுக்கு வீடு கட்டி தரும் லைப் மிஷன் திட்டத்தில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அமலாக்கத்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனின் கூடுதல் தனி செயலாளரான ரவீந்திரன் நேற்று அமலாக்கத்துறை முன்பு ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் சுமார் 10 மணி நேரம் விசாரணை நடத்தினர். இது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.