இந்தியா

கவர்னரை நீக்க வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை சரியானதே- கபில்சிபல் சொல்கிறார்

Published On 2023-07-10 13:05 IST   |   Update On 2023-07-10 13:05:00 IST
  • எதிர்க்கட்சிகள் ஆட்சியில் இருக்கும் மாநிலங்களின் கவர்னர்கள் இந்துத்துவா நிகழ்ச்சி நிரலை நடத்திக் கொண்டு இருக்கிறார்கள்.
  • கவர்னர் ஆர்.என்.ரவியை நீக்குமாறு மு.க.ஸ்டாலின் கேட்பது சரியானதே.

புதுடெல்லி:

ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று 19 பக்க புகார் கடிதம் எழுதினார். அதில் கவர்னர் பதவிக்கு ஆர்.என்.ரவி தகுதியற்றவர் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் கவர்னர் ஆர்.என்.ரவியை நீக்குமாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேட்பது சரியானதே என்று மேல்சபை எம்.பி. கபில்சிபல் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

கவர்னர் என்பவர் வெறும் அலங்கார நிர்வாகி. கவர்னர்களுக்கு நிர்வாகத்தில் தலையிடும் அதிகாரம் இல்லை என்று அம்பேத்கர் கூறியிருந்தார்.

எதிர்க்கட்சிகள் ஆட்சியில் இருக்கும் மாநிலங்களின் கவர்னர்கள் இந்துத்துவா நிகழ்ச்சி நிரலை நடத்திக் கொண்டு இருக்கிறார்கள். சீர்குலைப்பு மற்றும் தலையீடு இருக்கிறது. வெறுப்பை தூண்டுகின்றனர். கவர்னர் ஆர்.என்.ரவியை நீக்குமாறு மு.க.ஸ்டாலின் கேட்பது சரியானதே.

இவ்வாறு கபில்சிபல் கூறியுள்ளார்.

Tags:    

Similar News