இந்தியா
சந்திரபாபு நாயுடுவுக்கு கண் அறுவை சிகிச்சை
- ஐதராபாத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சந்திரபாபு நாயுடுக்கு 2 மணி நேரம் வலது கண் ஆபரேசன் நடந்தது.
- கண் ஆபரேசன் நடந்த ஆஸ்பத்திரி முன்பாக கட்சி தலைவர்கள் தொண்டர்கள் குவிந்தனர்.
திருப்பதி:
தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், ஆந்திர முன்னாள் முதல் மந்திரிமான சந்திரபாபு நாயுடு திறன் மேம்பாட்டு திட்டத்தில் ஊழல் செய்ததாக ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்தார்.
தனக்கு கண் அறுவை சிகிச்சை செய்ய ஜாமீன் வழங்க வேண்டும் என ஆந்திரா ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இதையடுத்து ஆந்திரா ஐகோர்ட்டு சந்திரபாபு நாயுடுவுக்கு ஜாமீன் வழங்கியது.
இந்த நிலையில் நேற்று ஐதராபாத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சந்திரபாபு நாயுடுக்கு 2 மணி நேரம் வலது கண் ஆபரேசன் நடந்தது.
கண் ஆபரேசன் நடந்த ஆஸ்பத்திரி முன்பாக கட்சி தலைவர்கள் தொண்டர்கள் குவிந்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
கண் ஆபரேசன் முடிந்த பிறகு சந்திரபாபு நாயுடு ஜூப்ளி ஹில்சில் உள்ள தனது வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்.