இந்தியா

ஆந்திராவில் கார்-லாரி மோதல்: திண்டுக்கல்லை சேர்ந்த 4 பேர் பலி

Published On 2024-05-27 08:28 GMT   |   Update On 2024-05-27 08:28 GMT
  • சாலையின் தடுப்பில் மோதி எதிர் திசையில் கார் சென்றது. அப்போது எதிரே வந்த லாரியில் கார் நேருக்கு நேர் மோதியது.
  • அதிகாலையில் 2 விபத்துகளில் 8 பேர் பலியான சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருப்பதி:

திண்டுக்கல் மாவட்டம் நல்லாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சாமிநாதன். இவர் தனது குடும்பத்துடன் ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார்.

அங்கிருந்து இன்று அதிகாலை காரில் புறப்பட்டு வந்தனர். கிருஷ்ணா மாவட்டம் பாபுலபாடு என்ற இடத்தில் வந்த போது கட்டுப்பாட்டை இழந்து கார் தாறுமாறாக ஓடியது.

சாலையின் தடுப்பில் மோதி எதிர் திசையில் கார் சென்றது. அப்போது எதிரே வந்த லாரியில் கார் நேருக்கு நேர் மோதியது.

இதில் கார் முழுவதும் நொறுங்கியது. இந்த விபத்தில் சாமிநாதன் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த கோபி (வயது 23), ராதா பிரியா (16), ராகேஷ் (12) ஆகியோர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர். சாமிநாதனின் மனைவி படுகாயமடைந்தார்.

அவரை மீட்டு விஜயவாடா ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். போலீசார் பலியான 4 பேர் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதே போல திருப்பதி மாவட்டத்தில் நெல்லூர் - வேலூர் சாலையில் இன்று காலை சாலை தடுப்பில் கார் மோதியதில் 4 பேர் இறந்தனர்.

அதிகாலையில் 2 விபத்துகளில் 8 பேர் பலியான சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News