மக்கள் நலன்-அமைதி வேண்டி அக்னி குண்டம் இறங்கிய பாரதிய ஜனதா தலைவர்
- சம்பித்பத்ரா, கிராம மக்கள் மகிழ்ச்சியாகவும், செழிப்பாகவும் இருக்க விரும்புகிறேன்.
- யாத்திரையின் போது நெருப்பின் மீது நடந்து தாயின் ஆசிர்வாதத்தை பெறுவதன் மூலம் ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
ஒடிசா மாநிலத்தின் பூரி மாவட்டத்தில் உள்ள சமங் பஞ்சாயத்திற்குட்பட்ட ரெபதி ராமன் கிராமத்தில் நடந்த யாத்திரைக்கு அம்மாநிலத்தின் பா.ஜனதா கட்சியை சேர்ந்த மூத்த தலைவரும், தேசிய செய்தி தொடர்பாளருமான சம்பித்பத்ரா சென்றுள்ளார். அப்போது அங்கு ஜமுசாத்ரா எனப்படும் அக்னி குண்ட நிகழ்ச்சி நடந்துள்ளது. இதில் சம்பித்பத்ரா எரியும் நெருப்பில் 10 மீட்டர் தூரம் நடந்து சென்ற வீடியோக்கள் டுவிட்டரில் பகிரப்பட்டுள்ளது.
அதனுடன் சம்பித்பத்ரா,கிராம மக்கள் மகிழ்ச்சியாகவும், செழிப்பாகவும் இருக்க விரும்புகிறேன். எனவே தான் யாத்திரையின் போது நெருப்பின் மீது நடந்து தாயின் (துலாம் தெய்வம்) ஆசிர்வாதத்தை பெறுவதன் மூலம் ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மக்கள் நலனுக்காகவும், அப்பகுதியில் அமைதிக்காகவும் தான் அக்னி குண்டத்தில் இறங்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.