இந்தியா

கர்நாடகாவில் டெம்போ- லாரி மோதி விபத்து: 9 பேர் பலி- 13 பேர் படுகாயம்

Published On 2022-08-25 11:14 IST   |   Update On 2022-08-25 12:21:00 IST
  • இறந்தவர்கள் ரெய்ச்சூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த தினசரி கூலித் தொழிலாளர்கள்.
  • தெரியவந்துள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

கர்நாடக மாநிலம் தும்குர் மாவட்டத்தில் உள்ள கலம்பெல்லா என்கிற கிராமம் அருகே இன்று அதிகாலையில் டெம்போ ஒன்று லாரி மீது மோதி நடந்த விபத்தில் குறைந்தது 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 13 பேர் காயமடைந்துள்ளனர்.

இறந்தவர்கள் ரெய்ச்சூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த தினசரி கூலித் தொழிலாளர்கள் என்றும், பெங்களூரு நோக்கிச் சென்று கொண்டிருந்தவர்கள் என்றும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து துமகுரு மாவட்டப் பொறுப்பாளரும் உள்துறை அமைச்சருமான அரக ஞானேந்திரா வெளியிட்டுள்ள அறிக்கையில், "மாவட்ட துணை ஆணையர் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் பேசியதாகவும், காயமடைந்தவர்களுக்குத் தேவையான சிகிச்சை அளிக்கப்படுவதை கண்காணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டிருந்தது.

Tags:    

Similar News