இந்தியா

சந்திரபாபு நாயுடு வழக்கு- சுப்ரீம் கோர்ட்டில் ஆந்திர அரசு மேல்முறையீடு

Published On 2023-11-21 11:06 GMT   |   Update On 2023-11-21 11:50 GMT
  • ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சந்திரபாபு நாயுடுவிற்கு கண் புரை அறுவை சிகிச்சை நடைபெற்றது.
  • ஆந்திர பிரதேச உயர் நீதிமன்றம், அக்டோபர் 31-ந்தேதி அன்று சந்திரபாபு நாயுடுவுக்கு இடைக்கால ஜாமின் வழங்கியது.

ஆந்திர மாநில முன்னாள் முதல்-மந்திரியும் தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு அவரது ஆட்சிக்காலத்தில் திறன் மேம்பாட்டு கழகத்தில் ஊழல் செய்ததாக கைது செய்யப்பட்டு ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறையில் அவர் உடல் ஆரோக்கியத்தில் சரிவு ஏற்பட தொடங்கியது. மேலும், கண் பார்வை குறைபாடுகளை சரி செய்ய அவருக்கு கண் புரை அறுவை சிகிச்சையும் தேவைப்பட்டது. எனவே, இதற்கு அனுமதிக்குமாறு நீதிமன்றத்தில் சந்திரபாபு நாயுடு ஜாமின் கோரியிருந்தார். அந்த மனுவை பரிசீலனை செய்த ஆந்திர பிரதேச உயர் நீதிமன்றம், அக்டோபர் 31-ந்தேதி அன்று அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்கியது.

இதையடுத்து ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சந்திரபாபு நாயுடுவிற்கு கண் புரை அறுவை சிகிச்சை நடைபெற்றது. தொடர்ந்து சிகிச்சை பெற வேண்டியுள்ளதால் இடைக்கால ஜாமினை சாதாரண ஜாமினாக மாற்ற கோரி அவர் மனு தாக்கல் செய்தார். இன்று அவருக்கு ஆந்திர உயர் நீதிமன்றம் சாதாரண ஜாமின் வழங்கியது.

இந்நிலையில், சந்திரபாபு நாயுடுவுக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம் உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஆந்திர அரசு மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளது.

இம்மனு மீது விரைவில் விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News