இந்தியா

கேரளாவில் பன்றிகளுக்கு ஆப்பிரிக்கா பன்றிக்காய்ச்சல்- 300 பன்றிகள் அழிக்க முடிவு

Published On 2022-07-22 06:51 GMT   |   Update On 2022-07-22 06:51 GMT
  • ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் என்பது வீட்டுப் பன்றிகளை பாதிக்கும் மிகவும் தொற்று மற்றும் ஆபத்தான வைரஸ் நோயாகும்.
  • நோய் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் பீகார் மற்றும் சில வடகிழக்கு மாநிலங்களில் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் பதிவாகியுள்ளதாக மத்திய அரசு சமீபத்தில் எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் என்பது வீட்டுப் பன்றிகளை பாதிக்கும் மிகவும் தொற்று மற்றும் ஆபத்தான வைரஸ் நோயாகும்.

இந்நிலையில், கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் உள்ள மானந்தவாடியில் உள்ள இரண்டு பண்ணைகளில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வயநாடு மாவட்டத்தில் உள்ள இரண்டு பண்ணைகளில் பன்றிகளின் மாதிரிகள் போபாலில் உள்ள உயர் பாதுகாப்பு விலங்கு நோய்களுக்கான தேசிய நிறுவனத்தில் மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர், பரிசோதனை முடிவில் பன்றிகளுக்கு ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதுகுறித்து கால்நடை பராமரிப்புத் துறையின் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

பண்ணை ஒன்றில் பன்றிகள் மொத்தமாக இறந்துக்கிடந்ததை அடுத்து மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. பரிசோதனை முடிவு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இரண்டாவது பண்ணையில் உள்ள 300 பன்றிகளை அழிப்பதற்கான வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. நோய் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News