இந்தியா

தாய், தந்தை கண் எதிரே பரிதாபம்- தொண்டையில் தேங்காய் துண்டு சிக்கி சிறுவன் மரணம்

Published On 2023-06-30 09:16 IST   |   Update On 2023-06-30 09:16:00 IST
  • கோவிலில் தரிசனத்தின் போது உடைக்கப்பட்ட தேங்காய் உள்ளிட்ட பிரசாதங்களுடன் அனைவரும் வீட்டுக்கு வந்தனர்.
  • வீட்டில் சிறுவர்கள் சாமிக்காக உடைக்கப்பட்ட தேங்காயை சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.

திருப்பதி:

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாக்குளம் மாவட்டத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 35), ஆட்டோ டிரைவர். இவரது மனைவி திரிவேணி(30). தம்பதியின் மகன்கள் யஷ்வந்த் (5), ஜஸ்வந்த்(3).

சீனிவாசன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது குடும்பத்தினருடன், ஐதராபாத் அருகே உள்ள குசைகுடா சோனியா நகரில் குடிபெயர்ந்தார்.

நேற்று சீனிவாசன் தனது குடும்பத்தினருடன் அருகிலுள்ள சாய்பாபா கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார்.

கோவிலில் தரிசனத்தின் போது உடைக்கப்பட்ட தேங்காய் உள்ளிட்ட பிரசாதங்களுடன் அனைவரும் வீட்டுக்கு வந்தனர்.

வீட்டில் சிறுவர்கள் சாமிக்காக உடைக்கப்பட்ட தேங்காயை சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது தேங்காய் துண்டு ஜஸ்வந்த் தொண்டையில் சிக்கியது.

திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டதால் தாய், தந்தை கண்முன்னே சிறுவன் பரிதாபமாக இறந்தான்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News