இந்தியா

மேற்கு வங்காளத்தில் 2-வது நாளாக போராட்டம்- போலீசார் மீது கல்வீச்சு

Published On 2022-06-11 10:17 GMT   |   Update On 2022-06-11 10:17 GMT
நபிகள் நாயகம் குறித்த சர்ச்சையான கருத்தை தெரிவித்த பா.ஜனதாவை சேர்ந்த நுபுர் சர்மா, நவீன்குமார் ஜிண்டால் ஆகியோரை கைது செய்ய கோரி இஸ்லாமியர்கள் நேற்று நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடு பட்டனர். சில இடங்களில் போராட்டம் வன்முறையாக மாறியது. மேற்கு வங்காள மாநிலத

கொல்கத்தா:

நபிகள் நாயகம் குறித்த சர்ச்சையான கருத்தை தெரிவித்த பா.ஜனதாவை சேர்ந்த நுபுர் சர்மா, நவீன்குமார் ஜிண்டால் ஆகியோரை கைது செய்ய கோரி இஸ்லாமியர்கள் நேற்று நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடு பட்டனர். சில இடங்களில் போராட்டம் வன்முறையாக மாறியது.

மேற்கு வங்காள மாநிலத்தில் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. பல வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன.

ஹவுரா மாவட்டம் பஞ்சலா பசார் பகுதியில் இன்று 2-வது நாளாக போராட்டம் நடந்தது. இங்கு போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது.

போலீசார் மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசினார்கள். இதை தொடர்ந்து போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினார்கள்.

அங்கு இன்று 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வருகிற 15-ந் தேதி வரை இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும். இதே போல் 13-ந் தேதி காலை 6 மணி வரை இணையதள சேவையும் முடக்கப்பட்டுள்ளது.

மக்கள் பொய்யான தகவலை நம்பி கலவரத்தில் ஈடுபட வேண்டாம் என்று போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதற்கிடையே டெல்லி ஜூம்மா மசூதிக்கு வெளியே நடந்த போராட்டம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News