இந்தியா
இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு 114 ஆக குறைந்தது
- கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 175 பேர் மீண்டுள்ளனர்.
- இதுவரை குணம் அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 4 ஆயிரத்து 592 ஆக உயர்ந்துள்ளது.
புதுடெல்லி:
இந்தியாவில் புதிதாக 114 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் கூறி உள்ளது. நேற்று முன்தினம் பாதிப்பு 173 ஆகவும், நேற்று 159 ஆகவும் இருந்தது. தொடர்ந்து 3-வது நாளாக இன்றும் பாதிப்பு சரிந்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 75 ஆயிரத்து 95 ஆக உயர்ந்தது.
தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 175 பேர் மீண்டுள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 4 ஆயிரத்து 592 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பால் புதிதாக உயிரிழப்பு இல்லை. மொத்த பலி எண்ணிக்கை 5,30,658 ஆக நீடிக்கிறது. ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை நேற்றை விட 61 குறைந்துள்ளது. அதாவது தற்போது 3,845 பேர் சிகிச்சையில் உள்ளனர்.