இந்தியா

ஓட்டுனர் தூங்கியதால் விபரீதம்: பேருந்து மீது கார் மோதி பயங்கர விபத்து- 11 தொழிலாளர்கள் உடல் நசுங்கி பலி

Published On 2022-11-04 09:33 IST   |   Update On 2022-11-04 10:59:00 IST
  • விபத்தில் நசுங்கிய காரில் இருந்து மீதமுள்ள உடல்களை வெளியே எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
  • வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மத்தியப் பிரதேசம் மாநிலம் போபால் மாவட்டத்தில் உள்ள பெதுல் என்ற இடத்தில் நேற்று இரவு கார் ஒன்று பேருந்து மீது மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர்.

11 தொழிலாளர்கள் மகாராஷ்டிராவின் அமராவதியிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, குட்கான் மற்றும் பைஸ்தேஹி இடையே ஜல்லார் காவல் நிலையம் அருகே அதிகாலை 2 மணியளவில் விபத்து ஏற்பட்டது.

விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்த போலீசார் மீட்பு குழுவினரின் உதவியுடன் காரில் இருந்து ஏழு பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. விபத்தில் நசுங்கிய காரில் இருந்து மீதமுள்ள உடல்களை வெளியே எடுக்கும் பணி நடைபெற்று வருவதாக பெதுல் உயர் போலீஸ் அதிகாரி சிமலா பிரசாத் கூறினார்.

மேலும் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், காரை ஓட்டியபோது டிரைவர் தூங்கியதால் விபத்து நடந்தது தெரியவந்தது. இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.


Tags:    

Similar News