இந்தியா
சத்தமில்லாமல் கட்டணத்தை உயர்த்திய Swiggy.. 2 வருடங்களில் 600 சதவீதம் அதிகரிப்பு!
- 2 ஆண்டுகளில் 600 சதவீதம் அதிகரித்துள்ளது.
- Zomato பிளாட்ஃபார்ம் கட்டணம் ரூ.10 ஆக உள்ளது.
முன்னணி ஆன்லைன் உணவு விநியோக நிறுவனமான ஸ்விகி (Swiggy), தனது பிளாட்ஃபார்ம் கட்டணத்தை 17 சதவீதம் அதிகரித்து ரூ.12 இல் இருந்து ரூ.14 ஆக உயர்த்தியுள்ளது.
அதிக தேவை உள்ள பகுதிகளில் இந்த அதிகரிப்பு சோதனை அடிப்படையில் இந்த பயன்பாட்டு கட்டண உயர்வு செயல்படுத்தப்படுவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
பண்டிகைக் காலத்தில் ஆர்டர்கள் அதிகரித்ததால் இந்த தற்காலிக முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஸ்விகி தெரிவித்துள்ளது.
2023 ஆம் ஆண்டில் வெறும் ரூ.2 ஆக இருந்த இந்த பிளாட்ஃபார்ம் கட்டணம், 2 ஆண்டுகளில் 600 சதவீதம் அதிகரித்துள்ளது. மறுபுறம், Zomato பிளாட்ஃபார்ம் கட்டணம் ரூ.10 ஆக உள்ளது.