இந்தியா
முலாயம்சிங் யாதவ் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்
- முலாயம்சிங் யாதவ் உடல்நலக்குறைவு காரணமாக ஆகஸ்டு 22-ந்தேதி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
- கடந்த 2-ந் தேதி அவர் அங்குள்ள தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
குருகிராம் :
சமாஜ்வாடி கட்சியின் நிறுவனரும், உத்தரபிரதேச மாநில முன்னாள் முதல்-மந்திரியுமான முலாயம்சிங், உடல்நலக்குறைவு காரணமாக, கடந்த ஆகஸ்டு 22-ந் தேதி டெல்லி அருகே குருகிராமில் உள்ள மெடண்டா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது உடல்நிலை மோசமடைந்ததால், கடந்த 2-ந் தேதி அவர் அங்குள்ள தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்து வந்தது.
நேற்று அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமானது. அவருக்கு உயிர் காக்கும் மருந்துகள் அளிக்கப்பட்டதாகவும், சிறப்பு மருத்துவர்கள் அடங்கிய குழு அவரது உடல்நிலையை கண்காணித்து வருவதாகவும் ஆஸ்பத்திரி நிர்வாகம் தெரிவித்தது.