இந்தியா

வருணா தொகுதி மக்கள் என்னை கைவிட மாட்டார்கள்: சித்தராமையா நம்பிக்கை

Published On 2023-04-19 08:42 IST   |   Update On 2023-04-19 08:42:00 IST
  • வருணா தொகுதி மக்கள் பணத்திற்கு மயங்கி என்னை கைவிட மாட்டார்கள்.
  • நான் செய்த சாதனைகள் இங்குள்ள மக்களின் மனதில் உள்ளது.

பெங்களூரு :

கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

நான் வருணா தொகுதியில் பிறந்து வளர்ந்தவன். இந்த மண்ணின் மகன். இவர் நம்மவர் என்ற மனநிலை மக்களிடம் உள்ளது. நான் இதற்கு முன்பு வருணா தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தபோது எனது சக்தியை மீறி பல்வேறு பணிகளை செய்துள்ளேன். நான் செய்த சாதனைகள் இங்குள்ள மக்களின் மனதில் உள்ளது.

எனது வெற்றிக்கு இதைவிட வேறு என்ன சாட்சி வேண்டும்?. ராமநகரை சேர்ந்த, பெங்களூருவில் அரசியல் செய்து கொண்டிருக்கும் சோமண்ணாவை பா.ஜனதா மேலிடம் கட்டாயப்படுத்தி வருணாவில் நிற்க வைத்துள்ளது.

இது பா.ஜனதாவின் வேண்டுதல் ஆட்டிற்கும் (வேண்டுதலுக்காக பலியாக போகும் ஆடு), வருணாவின் மண்ணின் மைந்தருக்கும் இடையே நடைபெறும் தேர்தல். வருணா தொகுதி மக்கள் பணத்திற்கு மயங்கி என்னை கைவிட மாட்டார்கள்.

இவ்வாறு சித்தராமையா குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News