இந்தியா

இந்தியில் பேசிய SBI மேனேஜருக்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கடும் கண்டனம்

Published On 2025-05-21 12:04 IST   |   Update On 2025-05-21 12:04:00 IST
  • அனைவரும் மக்களை கண்ணியத்துடன் அணுக வேண்டும்.
  • வங்கி ஊழியர்கள் மாநில மொழியில் பேச முயற்சிக்க வேண்டும்.

கர்நாடகாவில் கன்னடம், ஆங்கிலத்தில் பேச மறுத்து இந்தியில் மட்டுமே தான் பேசுவேன் என வாடிக்கையாளர்களிடம் முறையிட்ட எஸ்.பி.ஐ. வங்கி மேலாளருக்கு அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான அவரது எக்ஸ் பதிவில், "கன்னடம், ஆங்கிலத்தில் பேச மறுத்து மக்களை அலட்சியப்படுத்திய எஸ்.பி.ஐ. வங்கி மேனேஜரின் செயல் கடுமையாக கண்டிக்கத்தக்கது. இத்தகைய சம்பவங்கள் இனி நடக்கக் கூடாது. வங்கி ஊழியர்கள் அனைவரும் மக்களை கண்ணியத்துடன் அணுக வேண்டும், மாநில மொழியில் பேச முயற்சிக்க வேண்டும்.

இந்தியில் பேசிய ஊழியரை பணி இடமாற்றம் செய்த எஸ்.பி.ஐ. வங்கி நிர்வாகத்தின் விரைவான நடவடிக்கையை பாராட்டுகிறேன்.

வங்கி ஊழியர்களுக்கு மாநில கலாசார, மொழியை மதிப்பதற்கான விழிப்புணர்வு வகுப்புகளை மத்திய நிதியமைச்சகம் நடத்த வேண்டும்" என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News