இந்தியா

ஷைனா என்.சி.-யை இறக்குமதி பொருள் எனக் கூறியது எப்படி இழிப்படுத்தியதாகும்: சஞ்சய் ராவத்

Published On 2024-11-02 13:15 IST   |   Update On 2024-11-02 13:15:00 IST
  • ஷைனா என்.சி. மும்பாதேவி தொகுதிக்கு தொடர்பில்லாதவர்.
  • இறக்குமதி பொருள் என அரவிந்த் சாவந்த் விமர்சனம் செய்திருந்தார்.

பா.ஜ.க. செய்தி தொடர்பாளராக இருந்தவர் பெண் தலைவர் ஷைனா என்.சி.. இவர் வேட்புமனு தாக்கலுக்கு ஒரு நாள் முன்னதாக பா.ஜ.க. கூட்டணியைச் சேர்ந்த ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனா காட்சியில் இணைந்தார். உடனே அவருக்கு மும்பாதேவி தொகுதியில் போட்டியிட ஏக்நாத் ஷிண்டே வாய்ப்பு வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து உத்தவ் தாக்கரே கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான அரவிந்த் சாவந்த், ஷைனா எம்.சி. ஒரு இறக்குமதி பொருள் ((imported maal)- மும்பாதேவி தொகுதிக்கு தொடர்பில்லாத வெளிப்பகுதியில் இருந்து வந்தவர்) என விமர்சித்திருந்தார்.

இதற்கு மகாயுதி கூட்டணியில் இருந்து கடுயைமான எதிர்ப்பு கிளம்பியது. இறக்குமதி பொருள் என இழிவுப்படுத்தியதாக கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.

இந்த நிலையில் உத்தவ் தாக்கரேயின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவத், அவ்வாறு பேசிய இழிவுப்படுத்தியது ஆகாது எனத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில் "அங்கே இழிப்புப்படுத்துவது என்பது இல்லை. அரவிந்த் சாவந்த் எங்களுடைய சீனியர் எம்.பி.. ஷைனா என்.சி. மும்பாதேவி தொகுதிக்கு வெளியில் இருந்து வந்தவர் என்பதை, அவர் ஒரு இறக்குமதி பொருள் எனக் கூறினார். அவ்வளவுதான். அவள் இறக்குமதி பொருள் என்றார். அது எப்படி இழிவுப்படுத்தியது ஆகும்?. சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தியை பற்றி நீங்கள் என்ன பேசுனீர்கள். ஒருமுறை நீங்கள் வரலாறை ஒருமுறை திரும்பி பார்க்க வேண்டும்.

தொகுதிக்கு சம்பந்தம் இல்லாத ஒரு நபர் வெளியில் இருந்து வந்து போட்டியிட்டால், மக்கள் அவர்களை வெளியில் இருந்து வந்தவர் என்றுதான் சொல்வார்கள். இதை மிகப்பெரிய பிரச்சனையாக உருவாக்க தேவையில்லை" என்றார்.

Tags:    

Similar News