இந்தியா

தொழில் செய்ய உகந்த மாநிலங்கள் தரவரிசை- முதல் 7 மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு

Published On 2022-07-01 02:59 GMT   |   Update On 2022-07-01 02:59 GMT
  • 2020-ம் ஆண்டின் வர்த்தக சீர்திருத்த செயல் திட்டத்தை அமல்படுத்தியதன் அடிப்படையில், தரவரிசை முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • சாதிக்க துடிக்கும் மாநிலங்களாக அசாம், கேரளா, கோவா, சத்தீஸ்கர், ஜார்கண்ட், ராஜஸ்தான், மேற்கு வங்காளம் ஆகிய 7 மாநிலங்கள் வகைப்படுத்தப்பட்டு உள்ளன.

புதுடெல்லி:

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், டெல்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், தொழில் செய்ய உகந்த மாநிலங்கள் தரவரிசை பட்டியலை வெளியிட்டார்.

2020-ம் ஆண்டின் வர்த்தக சீர்திருத்த செயல் திட்டத்தை அமல்படுத்தியதன் அடிப்படையில், இந்த தரவரிசை முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில், அதிகமாக சாதித்த மாநிலங்களாக 7 மாநிலங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. அப்பட்டியலில் தமிழ்நாடு இடம் பெற்றுள்ளது. ஆந்திரா, குஜராத், தெலுங்கானா, அரியானா, கர்நாடகா, பஞ்சாப் ஆகியவை மற்ற 6 மாநிலங்கள் ஆகும்.

சாதிக்க துடிக்கும் மாநிலங்களாக அசாம், கேரளா, கோவா, சத்தீஸ்கர், ஜார்கண்ட், ராஜஸ்தான், மேற்கு வங்காளம் ஆகிய 7 மாநிலங்கள் வகைப்படுத்தப்பட்டு உள்ளன.

உருவெடுத்து வரும் வர்த்தக மாநிலங்களாக புதுச்சேரி உள்பட 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

Tags:    

Similar News