இந்தியா

தொடர்ந்து 3ஆவது நாளாக ஏற்றம் கண்ட பங்குச் சந்தை

Published On 2025-04-16 17:14 IST   |   Update On 2025-04-16 17:14:00 IST
  • சென்செக்ஸ் 309.40 புள்ளிகள் உயர்ந்து 77,044.29 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
  • நிஃப்டி 108.65 புள்ளிகள் உயர்ந்து 23,437.20 புள்ளிகள் வர்த்தகம் நிறைவடைந்தது.

மும்பை பங்குச் சந்தை குறியீடு எண் சென்செக்ஸ், இந்திய பங்குச் சந்தை குறியீடு எண் இன்று தொடர்ந்து 3ஆவது நாளாக ஏற்றத்துடன் வர்த்தகம் நிறைவடைந்தது.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பால் இந்திய பங்குச் சந்தை கடும் சரிவை சந்தித்தது. உலக நாடுகள் எதிர்ப்பால் டிரம்ப் 90 நாட்களுக்கு இந்த வரி விதிப்பை நிறுத்தி வைத்துள்ளார்.

இதனால் பங்குச் சந்தைகள் ஏற்றம் கண்டு வருகின்றன. நேற்றைய முன்தினம், நேற்றைய வர்த்தக முடிவில் பங்குச் சந்தைகள் ஏற்றம் கண்டிருந்தன. இந்த நிலையில் இன்றும் பங்குச் சந்தை ஏற்றத்துடன் முடிவடைந்துள்ளது.

புதிய வெளிநாட்டு முதலீடு, சில்லறை பணவீக்கம் கடந்த ஆறு வருடங்களாக இல்லாத வகையில் குறைந்துள்ளது பங்குச் சந்தை உயர்வுக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

 மும்பை பங்குச் சந்தை குறியீடு எண் செக்செக்ஸ் நேற்றைய வர்த்தக முடிவில் 76,734.89 ஆக இருந்தது. இன்று காலை சுமார் 260 புள்ளிகள் உயர்ந்து 76,996.78 புள்ளிகள் வர்த்தகம் தொடங்கியது. குறைந்தபட்சமாக 76,543.77 புள்ளிகளிலும், அதிகபட்சமாக 77,110.23 புள்ளிகளிலும் வர்த்தகமானது. இறுதியாக 309.40 புள்ளிகள் உயர்ந்து 77,044.29 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

இந்திய பங்குச் சந்தை குறியீடு எண் நிஃப்டி நேற்றைய வர்த்தக முடிவில் 23,328.55 புள்ளியாக இருந்தது. இன்று காலை 16 புள்ளிகள் உயர்ந்து 23,344.10 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. குறைந்தபட்சமாக 23,273.05 புள்ளிகளிலும், அதிகபட்சமாக 23,452.20 புள்ளிகளிலும் வர்த்தகமானது. இறுதியாக 108.65 புள்ளிகள் உயர்ந்து 23,437.20 புள்ளிகள் வர்த்தகம் நிறைவடைந்தது.

Tags:    

Similar News