இந்தியா

ஜெய்ராம் ரமேஷ்

ராகுல் காந்தி மேற்கொள்ளும் யாத்திரை ஒற்றுமைக்கான யாத்திரை - ஜெய்ராம் ரமேஷ்

Published On 2022-08-31 19:54 GMT   |   Update On 2022-08-31 19:54 GMT
  • ராகுல் காந்தி செப்டம்பர் 7-ம் தேதி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான பாதயாத்திரையை தொடங்குகிறார்.
  • யாத்திரைக்கான ஏற்பாடுகளை கட்சியின் மூத்த தலைவர் மற்றும் நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

புதுடெல்லி:

இந்தியா அனைவருக்குமான நாடு என்ற கோட்பாட்டை விளக்கி அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி செப்டம்பர் 7-ம் தேதி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான மிகப்பெரிய பாதயாத்திரையை தொடங்குகிறார்.

150 நாட்களில் 3,500 கிலோமீட்டர் தூரம் கடக்க அவர் திட்டமிட்டுள்ளார். இதற்கான தொடக்க நிகழ்ச்சி கன்னியாகுமரி கடற்கரை சாலையில் செப்டம்பர் 7-ம் தேதி நடக்கிறது. ராகுல் காந்தி தலைமையில் நடைபெறும் இந்த யாத்திரைக்கான ஏற்பாடுகளை கட்சியின் மூத்த தலைவர் மற்றும் நிர்வாகிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், பா.ஜ.க. மேற்கொண்ட ரத யாத்திரை நாட்டை பிளவுபடுத்துவதற்கான யாத்திரை. ராகுல் காந்தி மேற்கொள்ளும் யாத்திரை ஒற்றுமைக்கான யாத்திரை, மக்களை ஒன்றுசேர்க்கும் யாத்திரை என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News