இந்தியா

உள்துறை மந்திரி அமித்ஷா

உள்துறை மந்திரி அமித்ஷா 3 நாள் பயணமாக காஷ்மீர் சென்றார்

Published On 2022-10-04 01:39 GMT   |   Update On 2022-10-04 01:39 GMT
  • உள்துறை மந்திரி அமித்ஷா 3 நாள் பயணமாக நேற்று காஷ்மீருக்குச் சென்றார்.
  • அமித்ஷா வருகையையொட்டி, ஸ்ரீநகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஸ்ரீநகர்:

உள்துறை மந்திரி அமித்ஷா 3 நாள் பயணமாக நேற்று காஷ்மீருக்குச் சென்றார். அவரை குஜ்ஜார், பேகர்வால் ஆகிய சமூகங்களின் பிரதிநிதிகள் சந்தித்துப் பேசினர். பா.ஜ.க. நிர்வாகிகளும் சந்தித்தனர்.

நவராத்திரியின் இறுதி நாள் என்பதால் இன்று மாதா வைஷ்ணவ தேவி கோவிலுக்குச் சென்று அமித்ஷா சாமி தரிசனம் செய்கிறார்.

அதன்பின், ரஜவுரிக்குச் செல்லும் அவர் அங்கு பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.

இதையடுத்து, காஷ்மீருக்குச் செல்லும் அவர் நாளை ஸ்ரீநகரில் நடக்கும் நிகழ்ச்சியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அமித்ஷா அடிக்கல் நாட்டுகிறார். முடிவடைந்த திட்டங்களை திறந்து வைக்கிறார். அத்துடன், கவர்னர் மனோஜ் சின்காவுடன் உயர்மட்ட பாதுகாப்பு ஆய்வு கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்கிறார். அதில், காஷ்மீரில் பாதுகாப்பு நிலவரம் குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. அதன்பிறகு, பாரமுல்லாவில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் அமித்ஷா பேசுகிறார்.

உள்துறை மந்திரி அமித்ஷாவின் வருகையையொட்டி காஷ்மீரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Tags:    

Similar News