இந்தியா

தாஜ் மஹாலுக்கு பாதுகாப்பு கவசம்.. டிரோன் எதிா்ப்பு அமைப்பை நிறுவ முடிவு!

Published On 2025-05-26 10:35 IST   |   Update On 2025-05-26 10:35:00 IST
  • பிரதான கோபுரத்திலிருந்து 200 மீட்டர் வரம்பிற்குள் திறம்பட இயங்கும்.
  • அதிநவீன டிரோன் நியூட்ரலைசேஷன் அமைப்பை நிறுவ அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

உலக பாரம்பரிய தளமாக அங்கீகரிக்கப்பட்ட தாஜ்மஹாலுக்கு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளதை அடுத்து, மத்திய அரசு பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

வான்வெளியில் ஏற்படும் ஆபத்துகளை திறம்பட சமாளிக்க அதிநவீன டிரோன் எதிர்ப்பு அமைப்பு நிறுவப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏசிபி சையத் அரிப் அகமது கூறுகையில், தாஜ்மஹால் வளாகத்தில் டிரோன் எதிர்ப்பு அமைப்பு நிறுவப்படும், இது 7 முதல் 8 கிலோமீட்டர் வரம்பிற்குள் செயல்படும்.

இந்த அமைப்பு தற்போது பிரதான கோபுரத்திலிருந்து 200 மீட்டர் வரம்பிற்குள் திறம்பட இயங்கும் என்றும், ஏதேனும் டிரோன் இந்தப் பகுதிக்குள் நுழைந்தால், அது அதன் சிக்னல்களைக் கண்டறிந்து தானாகவே அதை ஜாம் செய்து, அதைச் செயல்படாமல் செய்துவிடும் என்றும் அவர் விளக்கினார்.

இந்த டிரோன் எதிர்ப்பு அமைப்பின் செயல்பாடு குறித்து காவல்துறையினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் ஒரு சிறப்பு குழு அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

நாட்டில் அதிகம் பார்வையிடப்படும் சுற்றுலா தலங்களில் தாஜ்மஹாலும் ஒன்றாகும். இங்கு பாதுகாப்பு தற்போது மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை (CISF) மற்றும் உ.பி. காவல்துறையினரால் கண்காணிக்கப்படுகிறது.

இந்த நிலையில்தான் அதிநவீன டிரோன் நியூட்ரலைசேஷன் அமைப்பை நிறுவ அதிகாரிகள் முடிவு செய்து, அதற்கான தகுந்த ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News