இந்தியா
null

டெல்லியை நோக்கி விவசாயிகள் பேரணி மீண்டும் தொடக்கம்

Published On 2024-12-08 11:54 IST   |   Update On 2024-12-08 11:59:00 IST
  • தீர்வு காண்பதாக மத்திய அரசு அறிவித்து இருந்தது.
  • டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

கடந்த 2020ல் மூன்று புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் டெல்லியில் ஓராண்டுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து 2021 ஆம் ஆண்டு மூன்று புதிய வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெற்றது. மேலும் விவசாயிகளின் கோரிக்கையான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்டவை குறித்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்பதாக மத்திய அரசு அறிவித்து இருந்தது.

எனினும், இன்னும் அதற்கு தீர்வு காணப்படவில்லை. இதனை வலியுறுத்தி விவசாயிகள் தற்போது மீண்டும் போராட்டத்தைத் தொடங்கி உள்ளனர். டெல்லியிலே முகாமிட்டு விவசாயிகள் போராட்டத்தைத் தொடர இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டா எல்லையில் அரியாணா, பஞ்சாப் மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த சில தினங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஸ்தூர் மோர்ச்சா ஆகிய சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள் இதில் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில் டெல்லி செல்ல முற்பட்ட அவர்களை போலீசார் தடுத்தி நிறுத்தினர். விவசாயிகள் பேரணி அறிவிப்பைத் தொடர்ந்து டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. டெல்லி எல்லையில் தடுப்புகள் போடப்பட்டுள்ளன.

அரியானா, பஞ்சாப் எல்லைகளிலும் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் டெல்லி எல்லைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பல கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் இன்று 'டெல்லி சலோ' பேரணியை மீண்டும் தொடங்கியுள்ளனர். 

Tags:    

Similar News